முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

குறுங்கவிதை  

குறுங்கவிதை

குறுங்கவிதை

நேர்த்திக்கடன்?

காதல்மழை

அரம் போலும் வாழ்வு

ஆட்டோகிராப்

எங்கே நிம்மதி

மாடுகள் யோசிப்பதில்லை

சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் 2009

அதிர்ஷ்டம்?

தத்தித் தாவும் தங்கத் தளிரே!

மௌனம் பேசும் வார்த்தை

வாழ்க்கை

அன்புத் தோழியே

முரண்

பயணம் மாத இதழ் (ஜூன்2009)

விவசாயியின் வி()ளைச்சல்

* துளிப்பா

* போர்க்குண விதைகள்

* நல்ல மனிதன்

மழை

சிகரம் சிற்றிதழ் கவிதைகள் (மே- ஜூன் 2009)

* நீல நிலா சிற்றிதழ் கவிதைகள் (ஜூலை 09)

* உறவுகள்

* வாரியா புள்ள வாரியா?

* எரிந்தும் எரியாமலும்

* நான் நதி

* வலி

* அடைமழை

* கறுப்பு நாய்

* ஒரு பின்னரவில்...

* தேயும் வாழ்க்கை

* நிலா

* மாறுபாடுகள்

* புத்தகம்

* துளிப்பா

* உண்ணாவிரதம்

* வாழ்க்கை

* நாட்காட்டி

* விறகோடு உறவாடி

* நீர்க்குமிழி

* அம்மா

* முரண்பாடு

* பூக்களைப் பறிக்காதீர்கள்


சாவிகளால்
முடு்க்கி விடப் படாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றது
இன்றைய எனது உலகம்...
.
ஒருக்களித்துக் கிடக்கும்
பொம்மைகள் நடுவில்
மெளனமாய் உறங்கும் பிள்ளை....
பா. தியாகு,
கோயம்புத்தூர், இந்தியா.

குறுங்கவிதை  

கண்ணீர்க் கோடுகளுடன்
பாரம் சுமந்தபடி
கடந்து போனது
நத்தை...
"சக மனிதனைப் போல"

கந்தகப்பூக்கள் யுவபாரதி
சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா.

நேர்த்திக்கடன்?  


அய்யனுக்கு
அபிஷேகம் செய்து...

அம்மனுக்குப்
புடவை சாத்தி...

படை தெய்வங்களுக்குப்
படையலுமிட்டு...

பை உதறி கிளம்பும் போதும்
தெரியவில்லை
வாசல் பிச்சைக்காரியின்
அழுகுரல் மழலை.

யுவபாரதி, சிவகாசி,
தமிழ்நாடு, இந்தியா.

காதல்மழை  


ஒரு

மழையைப் போல்

சட்டெனக்

கரைத்து விட்டாய்!


தேடிக் கொண்டே

இருக்கின்றேன்

என்னை!



ஸ்ரீமதி,

குறிஞ்சிப்பாடி,

கொலுசு S.M.S. இதழ்

அரம் போலும் வாழ்வு  


கோடையின் வெம்மையில்
தார்ச்சாலையில் அமர்ந்து
ஒரு செங்கல்லை இருக்கையாக்கிக்கொண்டு
முழு நீளக் கம்பியினை
ஒரே அளவினாலான
சிறு சிறு துண்டுகளாக
அறுத்துக்கொண்டிருக்கிறார்
காலங்காலமா


பற்கள் தேய்ந்துபோன
ஒரு நாளில்
அவ் அரத்தை
தூக்கியெறிந்துவிடுகிறார்
அரத்தின் முதலாளி


http://thooralkavithai.blogspot.com/

ஆட்டோகிராப்  



குளம் வற்றத்தொடங்கியதும்

ஊர் திரும்பும்
.
அயல் தேசத்து பறவைகள்...

.
கரை நெடுகிலும்

காய்ந்தும், காயாலும்

கையெழுத்திடப் பட்டுருந்தன

"ஆட்டோகிராப்புகள்"

பா. தியாகு,
கோயம்புத்தூர், இந்தியா.

எங்கே நிம்மதி  











.
வாழ்வின் ஆதாரமே

கேள்விக்குறியாய்...

சூழும் துன்பங்களே

சூறாவளியாய்...

.

ஆறாத கடுந்துயரத்தில்

சுழன்று ஆர்ப்பரிக்கும்

கவலைக் கடலலையில்

உடல் நோக

தடம் புரணடு இடந்தெரியாமல்

இன்னலுரும் இழி நிலை

ஈழத்தமிழர் வாழ்வின்

இழிநிலை இன்னமும்...

.

சின்னப்புத்தி சிங்களச் சிப்பாய்களின்

கடுந் தோட்டாக்களுக்கு

சின்னாபின்னமானது

புனிதமான புத்த விகாரமும் தான்..

.

நிராதரவாக ஆதரவி தேடி

ஈழத்து வீதிகளில்

புத்தரே பழுத்த துனபத்துடன்

அலையும் அவல நிலை...

.

ஈழத்து பழச்சந்தையில்

பழக்குவியலுக்குப் பதிலாக

ஈழத்தமிழரின் பிணக்குவியல்கள்...

.

இறந்த ஈழப்பிஞ்சுகளின்

வதைபட்ட பூவுடலைப்

புதைத்திட ஆழ்மயாணத்தில்

சிறிதும் இடமில்லை...

.

ஈழத்துக் குழாய்களில்

குடிநீருக்குப் பதிலாகக்

குமுறும் ஈழத்தமிழரின்

இரத்தப் பிரவாகம்....

.

பிறந்த குழந்தை வாயில்

பாலுக்குப் பதில்

கொல்லப்பட்ட தாயின் இரத்தம்...

.

இருமடங்காய் ஒலிக்கும்

கொதிக்கும் என் இரத்தத்தின் வலி...

என்று மாறும் எம்மக்கள் இழிநிலை...

எழுந்திடு தமிழே... தமிழினமே....

.

கலைத்தாமரை,

மதுரை, தமிழ்நாடு, இந்தியா

மாடுகள் யோசிப்பதில்லை  



வெட்டு குத்துக்கள்
விமரிசையாய்

வீதிக்கு வீதி நடக்கும

"சாதிகள்" யோசிப்பதில்லை...

 

கலவரங்களில்

கையோ காலோ

கட்டியவன் தாலியோ

பறிபோகும

"மதங்கள்" யோசிப்பதில்லை...

 

ஆத்தா ஆத்தங்கைரயில

அப்பன் குளத்தங்கரையில

உயிர் துறந்து பிணங்களாய

"காதல்" யோசிப்பதில்லை....

 

தகுதியற்றவன் தலைவனாக

"தலை" நிமிர்ந்தததை இறைவனாக

தரம் பிரிக்கத் தெரியாத

"ம(ா)க்கள் யோசிப்பதில்லை....

 

முன்புற வாயிலில் தீனியும

பின்புற வாயிலில் சாணியும

ஆம் "மாடுகளும் யோசிப்பதில்லை"

 

ஆல. தமிழ்ப்பித்தன்,

புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்.

தமிழ்நாடு, இந்தியா.

சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் 2009  





இருளை விழுங்கி

ஏப்பமிடும் ஆதவனை

அந்தியில் விழுங்கி விடுகிறது

அந்த இருள்.

சந்திரா னோகரன், சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் ௨00௯

...............................

இறக்கி வைத்த பின்
எப்படி பாரமானது
'பெண் குழந்தை'
நா.கி. பிரசாத், சிகரம்-ஜுலை ஆகஸ்ட் 2009.
........................................................

கண்களைப் போன்றது

தேசம் நமக்குக் கண்களைப் ‍‍‍போன்றது

இதிலே மாற்றம் இல்லை- தாய்

நாடடினை மறந்து வாழ்பனுக்கு

நிச்சயம் ஏற்றமில்லை!

தாயும் தற்தையும்போன்றது தான்

வாழும்தேசமது-இதன்

ஒவ்வொரு மண்ணின் துகளும் கூட

சுவாசம்போன்றது தான்!


uyire போகும் என்றால் கூட

நட்டை இகழாதே - நம்

ஜீவாதாரம் இதுதான் என்பதை

என்றும் maravathe !



நாடே நமக்குச் சொத்தாகும் நம்


உணர்வே உயர்வின்சொத்தாகும் - நம்


சிந்தையில் இதனைக்கொண்டுவிட்டால்


வந்திருமோ இனி பிரிவினைகள்!



கார்முகிலோன், சென்னை.


.........................................................


அவன் விட்டெறிந்த


கல்லை விழுங்கிய குளம்


வளையங்களை உருவாக்கும்


என ‍‍எதிர்பார்க்கிறான்...



‍‍அவன் உறுவாக்கும் வளையங்களே


அவனை சிறைபடுத்துகிள்றன


என்பதை அறியாமல்....


.........................................



எங்களது மழையில்


திரண்டு வளர்ந்த


பெருத்த குடைக்காளான் நிழலிர்


யார்யாரோ இளைப்பாறுகிறார்கள்...


எங்களைத் தவிர!



ஆங்கரை பைரவி. சிகரம் ஜுலை ஆகஸட் 2009



,...............................................



தொலைந்து போனது


உறிவுகளின் அன்பு பறிமாற்றங்கள்


திருமண மண்டப வாசலில்


சிரித்தபடி கைகூப்பி வர‍‍வேற்கும்


இயந்திர பொம்மைகள்!



நீலநில செண்பகராஜன்.


சிகரம் ஜுலை ஆகஸட் 2009


,..................................................



கரைந்து உண்ணும் காக்கை


மறைந்து உண்ணும் மனிதன்


நிலை உயர்ந்திட்ட பறவைகள்



கெளதமன், சிகரம் ஜுலை ஆகஸட் 2009


,............................................




அந்த

வீதியோர பூவரசு மரம்தான்

சிறார்களின்

விளையாட்டரங்கம்?



கிளைகள் ஒவ்வொன்றும்

பேருந்தாக புகை வண்டியாக

இலைகளை சுருட்டி

பீப்பி வாசிப்போம்?



காய்களை பறித்து

பம்பரம் சுற்றுவோம்

என்றும் அந்த அரங்கம்

எழிலுடனே காட்சிதரும்



குருவி மைனாக்களின்

கொஞ்சல் ஒலி

கேட்டுக்கொண்டே இருக்கும்

அந்தமரம் / இன்று

காசுக்காக வெட்டப்பட்டது

சிறகடிக்கும் பறவைகளும்

கண்ணீர் விட்டுச் செல்கின்றன

இனி துளிர்காதா என்று



சோலச்சி, அகரப்பட்டி.

சிகரம் சிற்றிதழ் ஜூலை / ஆகஸ்ட் 2009

அதிர்ஷ்டம்?  



அன்றாட வாழ்க்கைச் சிக்கலில்

அடகு போனது

என்

அதிர்ஷ்டக்கல் மோதிரம்...


பாண்டூ, சிவகாசி, இந்தியா.

தத்தித் தாவும் தங்கத் தளிரே!  


தத்தித் தாவும்
தங்கத் தளிரே!
பொத்தி வச்ச
புத்தம் பூவே!!

நித்தம் சிரித்தே
சித்தம் அள்ளும்!
சிந்தும் சிரிப்பில்
சந்தம் துள்ளும்!!

தொட்டி மீனென
குட்டிக் கண்கள்!
எட்டிப் பிடிக்கும்
எந்தன் மனதை!!

பிஞ்சு விரல்கள்
பஞ்சு போல!
நறுமலர் சிரிப்பாய்
குறுமலர் பார்வை!!

நெஞ்சை மிதிக்கும்
பிஞ்சுக் காலகள்!
நஞ்சாய் போன
நெஞ்சை மாற்றும்!!

மொத்தம் பார்க்க
மெத்தப் படிந்த
அத்துணை அழுக்கும்
அழிந்தே போகும்!

கந்தகப்பூக்கள் யுவபாரதி, சிவகாசி, இந்தியா.

மௌனம் பேசும் வார்த்தை  


குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்கப் போர்த்திய போர்வையில்

உன் பிரியத்தின் கதகதப்பை உணர்ந்தேன்

.

மழைக்காலத்தின்

மாலை நேரத்தில்

நீ தந்ந தேனீரை விட

சுவையாக இருந்தது

உனது அன்பான முத்தம்

.

அறை முழுக்க

மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும்

நீ இல்லாத அறை

இருண்மையை எனக்குள் தடம் பதித்தது

.

"வான்கா"வின் நவீன ஓவியத்தைப் போன்று

என் உணர்வுகளைப்

புரிந்து கொள்ளாமல்

நீ ஊடலிடும் சமயத்தில்

உதிர்க்கும் வதைச்சொல்

உன் மனதின் வன்மத்தை

எதிரொலித்தது.


ஊடலுக்குப் பிறகு

சங்கீதமாய் ஒலிக்கும்

உனது சமாதான முயற்சியான

ெமல்லிய குரல்

ஆயிரம் அதிர்வலைகளைப் பிரசவிக்கும்

.

தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்

உன் புகைப்படத்தின் வழியே கசியும்

மௌனம் பேசும் வார்த்தைகளை

யாரால் கவிதையாக மொழி பெயர்க்க முடியும்?

.

நீலநிலா செண்பகராஜன், விருதுநகர், இந்தியா



வாழ்க்கை  


.........................................................................
வாழ்க்கை
ஒரு
அழகிய தவம்
அதில்
சாபங்களுக்கு சாத்தியமேயில்லை
பாவங்களின் மீதேறி
பயணிக்காத வரை.
எஸ்.ஆர்.கே. நந்தன்.
இராஜபாளையம், இந்தியா.

அன்புத் தோழியே  


என் கேள்விகள்....
சலசலக்கும் உன் பேச்சில் துவங்கி
மெளனத்தில் முடிகிறது....
உன் பதில்கள் எப்பொழுதும்
மெளனத்தில் துவங்கி
மெளனத்திலேயே முடிகிறது...

யுவபாரதி, சிவகாசி, இந்தியா.

முரண்  


சுடும் வெயில்
குப்பை பொறுக்கும்
ஏழமைச் சிறுமி...
ஓய்வெடுத்து் கொண்டிருந்தாள்
கோடிக்கணக்கில் செலவு செய்து
நின்ற சிலையின்
அரைகுறை நிழலில்....

கனிமொழி கருப்பசாமி. சிவகாசி. இந்தியா.

***

நெருப்பூ விதை *** தமிழ் சினிமா **** புத்தகங்கள் *** சிறுகதைகள் *** ஈழ நெருப்பூ *** கந்தகப் பூக்கள் சிற்றிதழ் ***

பயணம் மாத இதழ் (ஜூன்2009)  


மக்கள் கலாச்சார இலக்கிய மாத இதழ்
மேலத்துலுக்கங்குளம்,
மல்லாங்கிணர்,
விருதுநகர் - 626 109,
கைபேசி - 936 312 5082 வருடச் சந்தா ரூ. 50-00
.........................................................................................................

துளிபாக்கள்
பணத்திற்கு விற்றார் வாக்கு
ஜனநாயகத்துக இட்டார் "தூக்கு"
என்.அஞ்சுகம்
......................................................................
வணங்கியது இரு கைகள்
வாங்கியது ஒரு கை
முடிந்தது தேர்தல்
பழனி. இளங்கம்பன்
......................................................................
உலகெங்கும் போட்டி
சிந்தையும் செயலும் குவிந்தால்
இலக்கு தகர்க்கும் ஈட்டி.
என்.அஞ்சுகம்
......................................................................
பொய் நிழல்
பர பரப்புகளின் மடியில்
இங்கே - தினப் பொழுதுகளின்
செய்திச் சாரங்கள்
வடிவம் பெற்றாலும்,
நிஜங்களின் கூறுகள்
கட்டாய மறைப்பில்....

படிந்து போன பழைய
பரம்பரை அசத்திய நிழல்களின்
அழுத்தமான
படிமங்களில் பயணிக்கின்றது
இந்த நவீன கால எந்திரம்....

மானுட பலவீகங்களின்
ஒவ்வொரு இழையையும்
பகிரங்கமாகப் பட்டுதுணியாக்கி
விற்பதில் - இதை எவரும்
வெற்றி கொள்ள இயலாது....

பொய்களிடையே
உண்மை கலந்து
மெய்களிடையே
பொய்மை நுழைத்து
பந்தி விருந்தாக்கிப் பறிமாறும்
உண்மையான பொய் நிழலிது....
அனலேந்தி.
......................................................................
செருப்புறவு

கல் முள் வலிகளிலிருந்து
காலமெல்லாடம் காப்பாற்றினாலும்
கதவுக்கு வெளியேயே
வைத்திருக்கின்றாய்
நிர்த்தாட்சண்யமாய்....

கருத்து வேற்றுைமகளின் போது
கன்னியின் கைகளிலிருந்து
ஈளும் மன்றம் வரையில்
ஆயுதமாகின்றேன்....

உயர்நேர்தியும் வேைலப்பாடும்
எத்தைனதானிருந்தும்
அதிக விலையில் நீ
கெளரவப்படுத்தியிருந்தும்
உன் காலடியில்தான்
மிதிக்கிறேன்....

அறியாது அறுபட்ட வேைளகளில்
உன் மானமே போனதென்று
நினைக்கும் நீ
அந்த மானம் காக்கும்
கலைஞனின் முன்பான மட்டுமேன்
கஞ்சனாகிப் போகின்றாய்?....

ஆண்டவன் சந்நதியினுள்ளும்
உன் மனதை வெல்லும் சக்தி
வெளியிலிருக்கும் எனக்குத் தான்!
கே.பி.பத்மநாபன்
......................................................................
சைக்கிள் நீளும் தெரு

தினமும் வெவ்வேறு
சைக்கிள் வியாபாரமாய்
நீளும் எங்கள் தெரு...

நூல் தூக்கில்
திசைக்கொன்றாய் திரியும்
வண்ணக் காற்றூதிகளுடன்
நுழையவிருக்கின்றது
ஒரு சைக்கிள்...

விவரமான பொய்களுடன்
தத்தமது சிறார்களுடமிருந்து
காணடித்தாக வேண்டும்
காற்றூதிகள் கட்டிய
சைக்கிள் நீளும் தெருவை...!

பிரபாவாசன்
......................................................................
வறுமையும் வளமையும்

வறுமையும் தன்னுரிமை பெற்ற தாலே
............இன்னுமிங்கே விடியவில்லை உண்மை தானே..!
தெருக்களெலாம் வறுமையாலே உணவை நாளும்
............தேடுகின்ற ஏழைகளை காட்டி நிற்கும்..!
திரைத்துரையின் கலைநோக்கின் வறுமை யாலே
............தீமையான படங்களெலரம் ஆட்டம் ஆடும..!
ஒருமொழியில் பற்றுள்ளோர் வறுைம யாலே
............ஓடிவரும் அயல் சொற்கள் மிகுந்து போகும்..!

இந்தபல வறுமையெலாம் நீங்கி இங்கே
............இன்பம் வளைம வந்து பொங்கு தற்கே
வந்தவழி தவறாதென்று விட்டு விட்டு
............வாய்ப்புள்ள முறையினிலே தமிழ ரெல்லாம்
சொந்தமுடன் கைகோர்த்துக் கொண்டு ழைக்கச்
............சோர்வின்றி திட்டங்கள் தீட்ட வேண்டும்..!
தமிழகத்தில் இருக்கின்ற அைனவ ருக்கும்
............படிப்புக்கேற்ற வேலையொன்று கொடுக்க வேண்டும்..!

தரமற்ற திரைப்படங்கள் வந்த போதில்
............தமிழரெல்லாம் தடுத்தவற்றை மறிக்க வேண்டும்..!
திருமொழியாம் நம்மொழியில் வேற்று சொற்கள்
............தீண்டாமல் தனித்தமிழைக் கொள்ள வெண்டும்..!
இருக்கின்ற வறுமைநீங்கி வளைம பொங்க
............இனிவெற்றுப் பேச்சாலே பயன்க ளில்லை..!
விருப்புவெறுப் பேதுமின்றி மக்க ளெல்லாம்
............மக்களுக்கே செயலாற்றி வெற்றிகாண வேண்டும்..!
வளவ. துரையன்
............................................................................................
கறுப்புப் பணம்


புத்தபிரான் பிறந்த நாடு
திருவள்ளுவர் வாழ்ந்த நாடு
காந்தியும், மாவீரரும்
வள்ளலாரும். குருநானக்கும்
அரிச்சந்திரனும் பிறந்த நாடு.

சுவிஸ் வங்கி வைப்புப் பணம்
உலகளவில் பெரும்பணம்
இந்நாட்டு மக்கள் பணம்
ஏழைக்கு உதவாத பெரும்பணம்
வெளிநாட்டில் வெகு பத்திரம்.

இப்பணத்தை இந்நாட்டிற்குள்
கொண்டு வந்தால் நலமுண்டு ;
பணம் வரவில்லையெனினும்
பரவாயில்லை
பணம் வைத்திருப்பவர்களின்
விவரங்கள் வரட்டும்
பெரும் பணக்காரர்களின்
நேர்மையும், நியாயமும்
வியர்வை சிந்தும்
மங்கள் அறியட்டும்.
ரா. ஜானகிராமன்
...............................................................................................................

வரம் கேட்கிறேன்

இறையாண்மை மனதிருத்தி எண்ணங்களை சீர்திருத்தி
...........குறைகளைக் களைந்துவிட வரம் கேட்கிறேன்
நிறைவைக் கொடுத்து இந்நிலத்தாரின் நெஞ்சத்துக்
...........கறைகளைப் போக்கிவிட வரம் கேட்கிறேன்..!

அய்ந்தாண்டுக் கொருமுறையாய் அரசேறி நாடாளும்
...........அறிஞர்களை நல்லோரை வரம் கேட்கிறேன்
பைந்தமிழைத் தாய்மொழியைப் பயிற்று மொழியாக்கிவைத்து
...........காத்தருள வரம் கேட்கிறேன்..!

சட்டங்கள் செய்வோரைச் சமுதாயக் காவலரை
...........பட்டங்கள் பெற்றோைர வரம் கேட்கிறேன்
திட்டங்கள் பலதீட்டி, செறுக்குற்ற கயவர்களின்
...........கொட்டங்கள் அடக்கிவிட வரம் கேட்கிறேன்..!

எழுத்தாளர் கலைஞர்கள் இயலிசைச் சிற்பிகளை
...........பழுத்ததோர் பெரியோைர வரம் கேட்கிறேன்
புரையோடிப் போய் ஆறாப் புண்பட்ட சமுதாயம்
...........சேரப் படம் செய்க..! வரம் கேட்கிறேன்..!

மனிதமில்லா வணிகர்களை மண்மீது பற்றிழந்த
...........புனிதமிலாப் பொய்யர்கைள வரம் கேட்கிறேன்
இனியேனும் இந்நாட்டு இயற்ைகவளப் பொருள்விற்று
...........தனித்தன்மை காத்திருக..! வரம் கேட்கிறேன்..!
கவிச்சிறிபி "காற்று"

.............................................................................................................