முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* மாறுபாடுகள்  


வண்ணப் பூக்கள் வாசம் கண்டு
நாளெல்லாம் நந்தவனம் கிடந்தேன்.
இறுதி ஊர்வலத்தில் இறைந்த
பூக்கள் கண்டு புன்னகை மறந்தேன்.


மழலை மொழி கவிதை கண்டும்
மாசற்ற புன்னகை கண்டும் மகிழ்வில்
புதைந்து போயிருந்தேன்.
பிச்சை புகும் பிஞ்சு கண்டு கலங்கிப் போனேன்.
புன்னகைக்கும் மனிதர் கண்டு பூவாய் மலர்ந்தேன்
முதுகுக்குப் பின் செய்யும் துரோகம் கண்டு
உடைந்து நிற்கின்றேன்.

எஸ். ஜனனி அந்தோணிராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* புத்தகம்  



புத்தகம் கூட கைத்தடி தான்

தூங்குபவனை தட்டி எழுப்பும்...

விழுந்தவனை தூக்கி நிறுத்தும்...


ஆங்கரை பைரவி, லால்குடி.

சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* துளிப்பா  


மீனுக்கு இரையாகாமல்
மிதக்கின்றது வெள்ளை அப்பம்"
குளத்தில் விழுந்த நிலா"

வி. தங்கராஜ் சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* உண்ணாவிரதம்  


போடா போய்
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்...
தாய் விரட்டினாள்...

இங்கே ஏன் கிடக்கின்றாய்
எங்களோடு நீயும்
"பட்டினி" !
ஆலம் ஆனந்த மல்லிகை, கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* வாழ்க்கை  


தாலி அறுத்தால் மனைவி...
மொட்டை போட்டான் மகன்...
கண்ணீரோடு சுற்றம்....
வெட்டியான் வீட்டில்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...

மதுரை முருகேசன், கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நாட்காட்டி  


நல்ல நேரத்தைக் காட்டி
தன் ஆயுளை குறைத்துக் கொண்டது
"நாட்காட்டி"


வே. சிவக்குமார். கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* விறகோடு உறவாடி  


எனக்கு விவரம் தெரிந்த நாள்
முதலாய் வீட்டில் விறகு அடுப்பு தான்...
ஆனாலும் எனக்கு அதிகமாய் பிடித்த உணவை

எல்லாம் அடிக்கடி செய்யச் சொல்லி அடம் பிடிப்பேன்
அம்மாவும் சலிக்காமல் செய்து கொடுப்பாள்
வெளியூர் பயணமென்றால் நான் முழிக்கும் முன்பே
எப்படியாவது தயாராகிவிடும் எதாவது உணவு

கண் திறக்கக் கூட முடியாத நிலையில்
அம்மா காய்ச்சலில் விழுந்த சமயம்
கஞ்சி வைத்துத் தர வேண்டிய கட்டாயம்

எனக்குவெகு நேரம் போராடி விறகை பற்ற வைத்தேன்
எரிச்சலடைந்தது கண்கள்
விறகு தள்ளிய போது விரல்களில்

இரு கொப்புளங்கள்
கரித்துணி பிடித்து கஞ்சியை
இறக்குகையில் கையில் ஒரு சூடு
வெறுத்துப் போனேன்..

ஒரு வேலை கஞ்சிக்கே இத்தனை போராட்டமென்றால்?.....
அவசம் அவசரமாக ஓடிச் சென்று பார்த்தேன்
அம்மாவின் உள்ளங்கையை,
அரைத்த மருதாணிக்கு அடைக்கலம் கொடுத்து
அழகாய் இருக்க வேண்டிய தோல்

ஆமை ஓடாய் அழுத்தமேறிக் கிடந்தது.
அப்போது முடிவெடுத்தேன்
இனி பிடித்த உணவென்று எதுவும் வேண்டாம்
அம்மா "வடித்த உணவே" போதுமென்று...

அ. ராஜிவ்காந்தி. செய்யாறு.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நீர்க்குமிழி  


வாழ்க்கை ஒன்றுமில்லை
உதடு சுழித்துச் சொல்கிறது
நீர்க்குமிழி
கொள்ளிடம் காமராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* அம்மா  


மறைத்தது அடுப்புப் புகை
அம்மாவின் கண்ணீரை..

மு. குமரன். பன்னத்தூர்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009






* முரண்பாடு  


மூணாங்கிளாஸ் கூட படிக்காத முதலாளிக்கு
மூணு டிகிரி படித்தவன் வேலைக்கரனாய்...!
கால் வயிற்றுக் கஞ்சியின்றி கதறும் அந்த ஏழைக்கு
களியனமான பத்தாவது மாதமே பிள்ளை....!
கோயில் குளங்களில் குளித்து கோடிகளை கொட்டும்
குபேரனுக்கு பிள்ளை இல்லை...!
கேடியாய் இருப்பவன் கொடிகளிள் புரள்கிறான்
நேர்மையாய் இருப்பவன் நாலு காசின்றி மருல்கிறான்...!
கொலை காரனுக்கு மாலை போட்டு வீதியெங்கும் வரவேற்ப்பு
குருதி சிந்திய தியாகிக்கு ரோட்டோரமே படுக்கை விரிப்பு...!
சாக்கடையாய் பங்களாவிலே வாழ்கிறாள் விலைமகள்
சாக்கடை ஓரத்திலே சோறின்றி சாகின்றாள் குலமகள்....!
பன்னீரிலே குளிப்பவனுக்குப் பகலெல்லாம் விளையாட்டு
கண்னிரிலே கரைபவனுக்கு கனவில் கூட வேதனைப் பாட்டு....!
பாதாம் பருப்பும், பிரியாணியும் பகட்டாய் தின்னும்
பழையகஞ்சிககும் புலம்பும் மற்றொருவன்....!
வீதியெங்கும் உண்டு இந்த வித்தியாசம் விரைவில் விரட்டுவதே நம் சாகசம்...!

குடந்தை சந்திர பெருமாள்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009