சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் 2009
இருளை விழுங்கி
ஏப்பமிடும் ஆதவனை
அந்தியில் விழுங்கி விடுகிறது
அந்த இருள்.
சந்திரா மனோகரன், சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் ௨00௯
...............................
இறக்கி வைத்த பின்எப்படி பாரமானது
'பெண் குழந்தை'
நா.கி. பிரசாத், சிகரம்-ஜுலை ஆகஸ்ட் 2009.
........................................................
கண்களைப் போன்றது
தேசம் நமக்குக் கண்களைப் போன்றது
இதிலே மாற்றம் இல்லை- தாய்
நாடடினை மறந்து வாழ்பனுக்கு
நிச்சயம் ஏற்றமில்லை!
தாயும் தற்தையும் போன்றது தான்
வாழும் தேசமது-இதன்
ஒவ்வொரு மண்ணின் துகளும் கூட
சுவாசம் போன்றது தான்!
uyire போகும் என்றால் கூட
நட்டை இகழாதே - நம்
ஜீவாதாரம் இதுதான் என்பதை
என்றும் maravathe !
நாடே நமக்குச் சொத்தாகும் நம்
உணர்வே உயர்வின் சொத்தாகும் - நம்
சிந்தையில் இதனைக் கொண்டுவிட்டால்
வந்திருமோ இனி பிரிவினைகள்!
கார்முகிலோன், சென்னை.
.........................................................
அவன் விட்டெறிந்த
கல்லை விழுங்கிய குளம்
வளையங்களை உருவாக்கும்
என எதிர்பார்க்கிறான்...
அவன் உறுவாக்கும் வளையங்களே
அவனை சிறைபடுத்துகிள்றன
என்பதை அறியாமல்....
.........................................
எங்களது மழையில்
திரண்டு வளர்ந்த
பெருத்த குடைக்காளான் நிழலிர்
யார்யாரோ இளைப்பாறுகிறார்கள்...
எங்களைத் தவிர!
ஆங்கரை பைரவி. சிகரம் ஜுலை ஆகஸட் 2009
,...............................................
தொலைந்து போனது
உறிவுகளின் அன்பு பறிமாற்றங்கள்
திருமண மண்டப வாசலில்
சிரித்தபடி கைகூப்பி வரவேற்கும்
இயந்திர பொம்மைகள்!
நீலநில செண்பகராஜன்.
சிகரம் ஜுலை ஆகஸட் 2009
,..................................................
கரைந்து உண்ணும் காக்கை
மறைந்து உண்ணும் மனிதன்
நிலை உயர்ந்திட்ட பறவைகள்
கெளதமன், சிகரம் ஜுலை ஆகஸட் 2009
,............................................