முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* நீல நிலா சிற்றிதழ் கவிதைகள் (ஜூலை 09)  

மழை

ஒட்டுத் திண்ணையில் விழும்
ஓட்டு மழை நீரை
கையில் பிடித்தாடும் சிறுமி,

தெருவை நிறைத்தோடும்
வெள்ளத்தில்
காகிதப் படகு விடும் சிறுவன்,

ஓவியத்தில் உள்ளது போல்
அழகாயில்லை

வீட்டுக்குள் விழுகின்ற மழை!
ஸ்வரமஞ்சரி.
...............................................................................................

மேதின வாழத்து

உழைக்க, உழைக்க
உதிரத்தூய்மை
ஊட்டும் உழைப்பே வாழ்க!

தழைக்க தழைக்க
தரணி ஒழுக்கம்
தாங்கும் உழைப்பே வாழ்க!

இழைத்து இழைத்து
இயல்பில் இனிமை
இயற்றும் உழைப்பே வாழ்க!

அழைத்து அழைத்து
அகிலம் போற்றும்
உழைப்போர் தினமே வாழ்க!
பொ. செல்வராஜ்
...............................................................................................
கவிதையே!

எத்தைன முறை முயன்றாலும்
உன் புன்னகைக்கு ஈடான
ஒரு கவிதை எழுத
என்னால் முடியவில்லை!
ஜனனி அந்தோணிராஜ்
...............................................................................................
துளிப்பாக்கள்

பகலை வாசிக்கும்
குறுந்தகடு
சூரியன்!
கமலி வெங்கட்
...............................................................................................
குப்பைத் தொட்டியில்
துண்டு, துண்டாய் வானம்
உடைந்த கண்ணாடி
சி, கலைவாணி
...............................................................................................
கடவுளுக்கு எழுதிய கடிதம்
சரியாகக் கிடைத்தது
எழுதியவன் முகவரிக்கே!
அருணாச்சலசிவா.
...............................................................................................
அமெரிக்காவில் மகன்,
ஆஸ்திரேலியாவில் மகள்,
முதியோர் இல்லமா இந்தியா?
பாண்டூ.
...............................................................................................
பறக்கவிட்ட பலூனில்
சிறை பிடிக்கப்பட்டுள்ளது
அம்மாவின் மூச்சுக்காற்று!
தே, ரம்யா, நன்றி உதயம் SMS இதழ்
...............................................................................................
மிதிக்க மனமில்லை
பூவின் நிழலை
இளைப்பாறும் தும்பி!
அமீர்ஜான், செம்முரசு SMS இதழ்
...............................................................................................
இருப்பவன் பசியைத் தேடுகிறான்
இல்லாதவன்
உணவைத் தேடுகிறான்!
இராகவன்
...............................................................................................
ரோஜாப்பூக்கள்
எழுதி வைப்பதில்லை
முட்கள் ஜாக்கிரதை என்று...

சில பெண்களின் விழிகளும்
எழுதி வைப்பதில்லை
ஆண்களின் இதயம் ஜாக்கிரதை என்று
LIC சிவா
...............................................................................................
தேடல் கண்டு பிடித்துத் தந்தது
என்னை உன்னிடம் முழுமையாக....
ஆனால் நீயோ யாரையோ தேடியபடி
நீலநிலா செண்பகராஜன்
...............................................................................................
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்
உங்கள் நந்தவனத்தில்
சின்னதாய் இடம் கொடுங்கள்
என் சிசுவைப் புதைக்க.....

இனியாவது அவன் துயிலட்டும்
“ஷெல்“ வெடிக்கும் ஓசை
செவியில் விழாமல்.....
இராசை கண்மணிராசா
...............................................................................................
பதப்படுத்தப் பட்ட பிணமா
உன் அன்னை...?
“மம்மி“
கு.அ. தமிழ்மொழி
...............................................................................................
ஈழத் தமிழர்களின் கண்ணீர்த் துளி
கடலில் விழுந்த வடிவமாய்
உலக வரைபடத்தில் இலங்கை!
த.சு. சண்முகவேல்.
...............................................................................................
சிறப்பு அபிஷேகம் கோவிலுக்குள்
நினைவென்னவோ....
வெளியே கழற்றி விட்ட செருப்பு மீதே!
வைகைத் தென்றல் நாகராஜ்
...............................................................................................
உன்னைப் பற்றி
ஏதாவது எழுதியே ஆக வேண்டும்
எழுதும்படியாக
எதுவும் தோன்றவில்லை என்பதையேனும்...
G.S. தயாளன்.