முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

பயணம் மாத இதழ் (ஜூன்2009)  


மக்கள் கலாச்சார இலக்கிய மாத இதழ்
மேலத்துலுக்கங்குளம்,
மல்லாங்கிணர்,
விருதுநகர் - 626 109,
கைபேசி - 936 312 5082 வருடச் சந்தா ரூ. 50-00
.........................................................................................................

துளிபாக்கள்
பணத்திற்கு விற்றார் வாக்கு
ஜனநாயகத்துக இட்டார் "தூக்கு"
என்.அஞ்சுகம்
......................................................................
வணங்கியது இரு கைகள்
வாங்கியது ஒரு கை
முடிந்தது தேர்தல்
பழனி. இளங்கம்பன்
......................................................................
உலகெங்கும் போட்டி
சிந்தையும் செயலும் குவிந்தால்
இலக்கு தகர்க்கும் ஈட்டி.
என்.அஞ்சுகம்
......................................................................
பொய் நிழல்
பர பரப்புகளின் மடியில்
இங்கே - தினப் பொழுதுகளின்
செய்திச் சாரங்கள்
வடிவம் பெற்றாலும்,
நிஜங்களின் கூறுகள்
கட்டாய மறைப்பில்....

படிந்து போன பழைய
பரம்பரை அசத்திய நிழல்களின்
அழுத்தமான
படிமங்களில் பயணிக்கின்றது
இந்த நவீன கால எந்திரம்....

மானுட பலவீகங்களின்
ஒவ்வொரு இழையையும்
பகிரங்கமாகப் பட்டுதுணியாக்கி
விற்பதில் - இதை எவரும்
வெற்றி கொள்ள இயலாது....

பொய்களிடையே
உண்மை கலந்து
மெய்களிடையே
பொய்மை நுழைத்து
பந்தி விருந்தாக்கிப் பறிமாறும்
உண்மையான பொய் நிழலிது....
அனலேந்தி.
......................................................................
செருப்புறவு

கல் முள் வலிகளிலிருந்து
காலமெல்லாடம் காப்பாற்றினாலும்
கதவுக்கு வெளியேயே
வைத்திருக்கின்றாய்
நிர்த்தாட்சண்யமாய்....

கருத்து வேற்றுைமகளின் போது
கன்னியின் கைகளிலிருந்து
ஈளும் மன்றம் வரையில்
ஆயுதமாகின்றேன்....

உயர்நேர்தியும் வேைலப்பாடும்
எத்தைனதானிருந்தும்
அதிக விலையில் நீ
கெளரவப்படுத்தியிருந்தும்
உன் காலடியில்தான்
மிதிக்கிறேன்....

அறியாது அறுபட்ட வேைளகளில்
உன் மானமே போனதென்று
நினைக்கும் நீ
அந்த மானம் காக்கும்
கலைஞனின் முன்பான மட்டுமேன்
கஞ்சனாகிப் போகின்றாய்?....

ஆண்டவன் சந்நதியினுள்ளும்
உன் மனதை வெல்லும் சக்தி
வெளியிலிருக்கும் எனக்குத் தான்!
கே.பி.பத்மநாபன்
......................................................................
சைக்கிள் நீளும் தெரு

தினமும் வெவ்வேறு
சைக்கிள் வியாபாரமாய்
நீளும் எங்கள் தெரு...

நூல் தூக்கில்
திசைக்கொன்றாய் திரியும்
வண்ணக் காற்றூதிகளுடன்
நுழையவிருக்கின்றது
ஒரு சைக்கிள்...

விவரமான பொய்களுடன்
தத்தமது சிறார்களுடமிருந்து
காணடித்தாக வேண்டும்
காற்றூதிகள் கட்டிய
சைக்கிள் நீளும் தெருவை...!

பிரபாவாசன்
......................................................................
வறுமையும் வளமையும்

வறுமையும் தன்னுரிமை பெற்ற தாலே
............இன்னுமிங்கே விடியவில்லை உண்மை தானே..!
தெருக்களெலாம் வறுமையாலே உணவை நாளும்
............தேடுகின்ற ஏழைகளை காட்டி நிற்கும்..!
திரைத்துரையின் கலைநோக்கின் வறுமை யாலே
............தீமையான படங்களெலரம் ஆட்டம் ஆடும..!
ஒருமொழியில் பற்றுள்ளோர் வறுைம யாலே
............ஓடிவரும் அயல் சொற்கள் மிகுந்து போகும்..!

இந்தபல வறுமையெலாம் நீங்கி இங்கே
............இன்பம் வளைம வந்து பொங்கு தற்கே
வந்தவழி தவறாதென்று விட்டு விட்டு
............வாய்ப்புள்ள முறையினிலே தமிழ ரெல்லாம்
சொந்தமுடன் கைகோர்த்துக் கொண்டு ழைக்கச்
............சோர்வின்றி திட்டங்கள் தீட்ட வேண்டும்..!
தமிழகத்தில் இருக்கின்ற அைனவ ருக்கும்
............படிப்புக்கேற்ற வேலையொன்று கொடுக்க வேண்டும்..!

தரமற்ற திரைப்படங்கள் வந்த போதில்
............தமிழரெல்லாம் தடுத்தவற்றை மறிக்க வேண்டும்..!
திருமொழியாம் நம்மொழியில் வேற்று சொற்கள்
............தீண்டாமல் தனித்தமிழைக் கொள்ள வெண்டும்..!
இருக்கின்ற வறுமைநீங்கி வளைம பொங்க
............இனிவெற்றுப் பேச்சாலே பயன்க ளில்லை..!
விருப்புவெறுப் பேதுமின்றி மக்க ளெல்லாம்
............மக்களுக்கே செயலாற்றி வெற்றிகாண வேண்டும்..!
வளவ. துரையன்
............................................................................................
கறுப்புப் பணம்


புத்தபிரான் பிறந்த நாடு
திருவள்ளுவர் வாழ்ந்த நாடு
காந்தியும், மாவீரரும்
வள்ளலாரும். குருநானக்கும்
அரிச்சந்திரனும் பிறந்த நாடு.

சுவிஸ் வங்கி வைப்புப் பணம்
உலகளவில் பெரும்பணம்
இந்நாட்டு மக்கள் பணம்
ஏழைக்கு உதவாத பெரும்பணம்
வெளிநாட்டில் வெகு பத்திரம்.

இப்பணத்தை இந்நாட்டிற்குள்
கொண்டு வந்தால் நலமுண்டு ;
பணம் வரவில்லையெனினும்
பரவாயில்லை
பணம் வைத்திருப்பவர்களின்
விவரங்கள் வரட்டும்
பெரும் பணக்காரர்களின்
நேர்மையும், நியாயமும்
வியர்வை சிந்தும்
மங்கள் அறியட்டும்.
ரா. ஜானகிராமன்
...............................................................................................................

வரம் கேட்கிறேன்

இறையாண்மை மனதிருத்தி எண்ணங்களை சீர்திருத்தி
...........குறைகளைக் களைந்துவிட வரம் கேட்கிறேன்
நிறைவைக் கொடுத்து இந்நிலத்தாரின் நெஞ்சத்துக்
...........கறைகளைப் போக்கிவிட வரம் கேட்கிறேன்..!

அய்ந்தாண்டுக் கொருமுறையாய் அரசேறி நாடாளும்
...........அறிஞர்களை நல்லோரை வரம் கேட்கிறேன்
பைந்தமிழைத் தாய்மொழியைப் பயிற்று மொழியாக்கிவைத்து
...........காத்தருள வரம் கேட்கிறேன்..!

சட்டங்கள் செய்வோரைச் சமுதாயக் காவலரை
...........பட்டங்கள் பெற்றோைர வரம் கேட்கிறேன்
திட்டங்கள் பலதீட்டி, செறுக்குற்ற கயவர்களின்
...........கொட்டங்கள் அடக்கிவிட வரம் கேட்கிறேன்..!

எழுத்தாளர் கலைஞர்கள் இயலிசைச் சிற்பிகளை
...........பழுத்ததோர் பெரியோைர வரம் கேட்கிறேன்
புரையோடிப் போய் ஆறாப் புண்பட்ட சமுதாயம்
...........சேரப் படம் செய்க..! வரம் கேட்கிறேன்..!

மனிதமில்லா வணிகர்களை மண்மீது பற்றிழந்த
...........புனிதமிலாப் பொய்யர்கைள வரம் கேட்கிறேன்
இனியேனும் இந்நாட்டு இயற்ைகவளப் பொருள்விற்று
...........தனித்தன்மை காத்திருக..! வரம் கேட்கிறேன்..!
கவிச்சிறிபி "காற்று"

.............................................................................................................



What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories