சட்டம் படிக்க திட்டமிட்டு
பட்டப்பகலிலேயே கலைந்தது
அந்த கனவு
விட்டத்தைப் பார்த்து வீட்டுக்குள்ளே
அடங்கிப்போனேன்
புகுந்தவீட்டு சுயாட்சியில்
புத்தம்பரப்ப சித்தம் கொண்டேன்
நித்தம் நித்தம் நடந்தும் எனக்கெதிராய்
வரதட்சணையுத்தம்!
முதுகலை தமிழ் படிக்க முயன்று
முயன்று மூர்ச்சையானேன்
மன மகிழ்ச்சியோடு மாமியார் தந்தாள்
மலடி என்ற பட்டம்
தீந்தமிழ்க்கற்று திக்கெட்டும்
தமிழ்ப்புகழ் பரப்ப
நினைத்ததென் மனம்.
திட்டமிடாத திடீர் திருமணம்
தீக்குண கணவரால் கருகியே போனேன்
ஆணாதிக்கச் சந்தேகத் தீயில்
சாதிக்க நினைத்து சேமித்து வைத்த
சிறுவயது சிந்தனைகள்
சிதறியும் எரிந்து என் இதயக் கூட்டுக்குள்ளேயே...
தே.ரம்யா, கொட்டக்குளம்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
* நான் நதி
புகழ்ச்சியும்
இகழ்ச்சியும் ஒன்றுதான்
சென்று கொண்டே இருப்பேன்
போற்றுதலும்
புறக்கணிப்பும் ஒன்றுதான்
புறக்கணிப்பும் ஒன்றுதான்
சென்று கொண்டே இருப்பேன்
பதிலுரைப்பதில்லை...
எதிர்ந்து நிற்பதில்லை... என்றும் போல
வென்று கொண்டே இருப்பேன்.
வே. ம. தமிழரசு, பரமத்தி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* வலி
வலியின்றி வாழ்வில் விடிவேது
வலிக்க வலிக்கப் பெற்ற
தாயிங்கு வாழும் தெய்வம்
மண்ணிலே வலியைச் சுமக்கும்
இதயமிருந்தால் வழுக்கல் இல்லை
வாழ்விலே உளியும் வலியைச்
சுமந்துதான் உயிரோவியச்
சிலையைப் படைக்கிறது
உளியாய்த் தன்னைத் தாங்கும்
மனமே உறவை மனிதர்க்குக் கொடுக்கிறது
உளியாய் மனத்தையாக்கிக் கொண்டால்
உள்வலிகளெல்லாம் கைளயவே
தெளிவாய் வாழ்வையாக்கிக் கொண்டால்
தேனாகி வலியும் தித்திக்குமே
எண்ணிப்பார்த்தால் வலிகள் எல்லாம்
ஏழைச்சிந்திய வியர்வைகளே
எண்ணிக்கையற்ற மனித வலிக்ளெல்லாம்
ஏற்றம் காணத துயரங்களே...
கவிச்சுரபி சுப.சந்திரசேரன், சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* அடைமழை
இருட்டாமல் உருட்டாமல்
"அடைமழை"
விவசாயியின் "வியர்வைத் துளி"
எம். பொன்னார்,மணப்பாறை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* கறுப்பு நாய்
ஒரு நேரத்தில் பின்னால் துரத்தும்
மறு காலத்தில் ஓடும் முன்னால்
உச்சி வெயிலில் ஒட்டியே வரும்
மிச்ச கட்டத்தில் பதுங்கியிருக்கும்
அந்த கறுப்பு நாயை
என்ன செய்யினும் குரைக்காது
அதன் பயம் மனதில் வாலாட்டும்.
வேலையேதுமின்றி
சும்மாவேனும் நடமாடும்
மனிதரைப் பொறுத்தே உருமாறும்.
வெறி பிடிக்காது ஒருவரையும் கடிக்காது
நம்மைவிட்டு துரத்திவே முடியாது,
இருக்கும் நாமுள்ள வரை.
இரவு வந்தால் இருக்காது.
இரவு வந்தால் இருக்காது.
பகலில் மட்டுமே பிரவேசிக்கும்
பொன்.குமார்,சேலம்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* ஒரு பின்னரவில்...
ஒரு பின்னரவில்
இறங்கத் தயங்குகின்றன
இவ்விரண்டு கண்ணிமைகள்
தலையணைகள் எவ்விதம் கடும்பாறையாயிற்று
காலகொண்ட மிதக்கின்ற கட்டில்
வெளியேறி உலவினால் வியப்பதற்கில்லை
புது வழக்குச் சீட்டில்
இவனது பேரை எழுதிக் கொண்டு போனது
உளவு பார்த்த காற்று
தலைமேலோர் கறும்பல்லி
விழுந்தோடித் தொலைந்தது
திரையில் ஒளிர்ந்த ரோஜாவை தண்டிக்க
திரை கிழித்தால் வழிவதோ என்குருதி
வேடிக்கை பார்த்தமனம்
இறுதியில் சொன்னது படுத்தால்
தூங்கும் யோகம் வேண்டுமா மோகத்தின்
பின்னால் அலைவதை நிறுத்து!
இறங்கத் தயங்குகின்றன
இவ்விரண்டு கண்ணிமைகள்
தலையணைகள் எவ்விதம் கடும்பாறையாயிற்று
காலகொண்ட மிதக்கின்ற கட்டில்
வெளியேறி உலவினால் வியப்பதற்கில்லை
புது வழக்குச் சீட்டில்
இவனது பேரை எழுதிக் கொண்டு போனது
உளவு பார்த்த காற்று
தலைமேலோர் கறும்பல்லி
விழுந்தோடித் தொலைந்தது
திரையில் ஒளிர்ந்த ரோஜாவை தண்டிக்க
திரை கிழித்தால் வழிவதோ என்குருதி
வேடிக்கை பார்த்தமனம்
இறுதியில் சொன்னது படுத்தால்
தூங்கும் யோகம் வேண்டுமா மோகத்தின்
பின்னால் அலைவதை நிறுத்து!
வசந்தராஜா,நெய்வேலி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* தேயும் வாழ்க்கை
சாலையில் ஒரத்தில்
தேய்ந்து கிடக்கிறது
செருப்பு தைப்பவன் வாழ்க்கை
ஜா. பிராங்க்ளின்குமார்,மதுரை
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
* நிலா
எட்டிப் பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழந்த நிலா
ஜெயந்தி ரேகா, திருச்ச்சி
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009
by யுவபாரதி
Subscribe to:
Posts (Atom)