வலியின்றி வாழ்வில் விடிவேது
வலிக்க வலிக்கப் பெற்ற
தாயிங்கு வாழும் தெய்வம்
மண்ணிலே வலியைச் சுமக்கும்
இதயமிருந்தால் வழுக்கல் இல்லை
வாழ்விலே உளியும் வலியைச்
சுமந்துதான் உயிரோவியச்
சிலையைப் படைக்கிறது
உளியாய்த் தன்னைத் தாங்கும்
மனமே உறவை மனிதர்க்குக் கொடுக்கிறது
உளியாய் மனத்தையாக்கிக் கொண்டால்
உள்வலிகளெல்லாம் கைளயவே
தெளிவாய் வாழ்வையாக்கிக் கொண்டால்
தேனாகி வலியும் தித்திக்குமே
எண்ணிப்பார்த்தால் வலிகள் எல்லாம்
ஏழைச்சிந்திய வியர்வைகளே
எண்ணிக்கையற்ற மனித வலிக்ளெல்லாம்
ஏற்றம் காணத துயரங்களே...
கவிச்சுரபி சுப.சந்திரசேரன், சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009