தத்தித் தாவும் தங்கத் தளிரே!
தத்தித் தாவும்
தங்கத் தளிரே!
பொத்தி வச்ச
புத்தம் பூவே!!
நித்தம் சிரித்தே
சித்தம் அள்ளும்!
சிந்தும் சிரிப்பில்
சந்தம் துள்ளும்!!
தொட்டி மீனென
குட்டிக் கண்கள்!
எட்டிப் பிடிக்கும்
எந்தன் மனதை!!
பிஞ்சு விரல்கள்
பஞ்சு போல!
நறுமலர் சிரிப்பாய்
குறுமலர் பார்வை!!
நெஞ்சை மிதிக்கும்
பிஞ்சுக் காலகள்!
நஞ்சாய் போன
நெஞ்சை மாற்றும்!!
மொத்தம் பார்க்க
மெத்தப் படிந்த
அத்துணை அழுக்கும்
அழிந்தே போகும்!
கந்தகப்பூக்கள் யுவபாரதி, சிவகாசி, இந்தியா.