முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் 2009  





இருளை விழுங்கி

ஏப்பமிடும் ஆதவனை

அந்தியில் விழுங்கி விடுகிறது

அந்த இருள்.

சந்திரா னோகரன், சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் ௨00௯

...............................

இறக்கி வைத்த பின்
எப்படி பாரமானது
'பெண் குழந்தை'
நா.கி. பிரசாத், சிகரம்-ஜுலை ஆகஸ்ட் 2009.
........................................................

கண்களைப் போன்றது

தேசம் நமக்குக் கண்களைப் ‍‍‍போன்றது

இதிலே மாற்றம் இல்லை- தாய்

நாடடினை மறந்து வாழ்பனுக்கு

நிச்சயம் ஏற்றமில்லை!

தாயும் தற்தையும்போன்றது தான்

வாழும்தேசமது-இதன்

ஒவ்வொரு மண்ணின் துகளும் கூட

சுவாசம்போன்றது தான்!


uyire போகும் என்றால் கூட

நட்டை இகழாதே - நம்

ஜீவாதாரம் இதுதான் என்பதை

என்றும் maravathe !



நாடே நமக்குச் சொத்தாகும் நம்


உணர்வே உயர்வின்சொத்தாகும் - நம்


சிந்தையில் இதனைக்கொண்டுவிட்டால்


வந்திருமோ இனி பிரிவினைகள்!



கார்முகிலோன், சென்னை.


.........................................................


அவன் விட்டெறிந்த


கல்லை விழுங்கிய குளம்


வளையங்களை உருவாக்கும்


என ‍‍எதிர்பார்க்கிறான்...



‍‍அவன் உறுவாக்கும் வளையங்களே


அவனை சிறைபடுத்துகிள்றன


என்பதை அறியாமல்....


.........................................



எங்களது மழையில்


திரண்டு வளர்ந்த


பெருத்த குடைக்காளான் நிழலிர்


யார்யாரோ இளைப்பாறுகிறார்கள்...


எங்களைத் தவிர!



ஆங்கரை பைரவி. சிகரம் ஜுலை ஆகஸட் 2009



,...............................................



தொலைந்து போனது


உறிவுகளின் அன்பு பறிமாற்றங்கள்


திருமண மண்டப வாசலில்


சிரித்தபடி கைகூப்பி வர‍‍வேற்கும்


இயந்திர பொம்மைகள்!



நீலநில செண்பகராஜன்.


சிகரம் ஜுலை ஆகஸட் 2009


,..................................................



கரைந்து உண்ணும் காக்கை


மறைந்து உண்ணும் மனிதன்


நிலை உயர்ந்திட்ட பறவைகள்



கெளதமன், சிகரம் ஜுலை ஆகஸட் 2009


,............................................




அந்த

வீதியோர பூவரசு மரம்தான்

சிறார்களின்

விளையாட்டரங்கம்?



கிளைகள் ஒவ்வொன்றும்

பேருந்தாக புகை வண்டியாக

இலைகளை சுருட்டி

பீப்பி வாசிப்போம்?



காய்களை பறித்து

பம்பரம் சுற்றுவோம்

என்றும் அந்த அரங்கம்

எழிலுடனே காட்சிதரும்



குருவி மைனாக்களின்

கொஞ்சல் ஒலி

கேட்டுக்கொண்டே இருக்கும்

அந்தமரம் / இன்று

காசுக்காக வெட்டப்பட்டது

சிறகடிக்கும் பறவைகளும்

கண்ணீர் விட்டுச் செல்கின்றன

இனி துளிர்காதா என்று



சோலச்சி, அகரப்பட்டி.

சிகரம் சிற்றிதழ் ஜூலை / ஆகஸ்ட் 2009

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories