மூணாங்கிளாஸ் கூட படிக்காத முதலாளிக்கு
மூணு டிகிரி படித்தவன் வேலைக்கரனாய்...!
கால் வயிற்றுக் கஞ்சியின்றி கதறும் அந்த ஏழைக்கு
களியனமான பத்தாவது மாதமே பிள்ளை....!
கோயில் குளங்களில் குளித்து கோடிகளை கொட்டும்
குபேரனுக்கு பிள்ளை இல்லை...!
கேடியாய் இருப்பவன் கொடிகளிள் புரள்கிறான்
நேர்மையாய் இருப்பவன் நாலு காசின்றி மருல்கிறான்...!
கொலை காரனுக்கு மாலை போட்டு வீதியெங்கும் வரவேற்ப்பு
குருதி சிந்திய தியாகிக்கு ரோட்டோரமே படுக்கை விரிப்பு...!
சாக்கடையாய் பங்களாவிலே வாழ்கிறாள் விலைமகள்
சாக்கடை ஓரத்திலே சோறின்றி சாகின்றாள் குலமகள்....!
பன்னீரிலே குளிப்பவனுக்குப் பகலெல்லாம் விளையாட்டு
கண்னிரிலே கரைபவனுக்கு கனவில் கூட வேதனைப் பாட்டு....!
பாதாம் பருப்பும், பிரியாணியும் பகட்டாய் தின்னும்
பழையகஞ்சிககும் புலம்பும் மற்றொருவன்....!
வீதியெங்கும் உண்டு இந்த வித்தியாசம் விரைவில் விரட்டுவதே நம் சாகசம்...!
குடந்தை சந்திர பெருமாள்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009