வண்ணப் பூக்கள் வாசம் கண்டு
நாளெல்லாம் நந்தவனம் கிடந்தேன்.
இறுதி ஊர்வலத்தில் இறைந்த
பூக்கள் கண்டு புன்னகை மறந்தேன்.
மழலை மொழி கவிதை கண்டும்
மாசற்ற புன்னகை கண்டும் மகிழ்வில்
புதைந்து போயிருந்தேன்.
பிச்சை புகும் பிஞ்சு கண்டு கலங்கிப் போனேன்.
புன்னகைக்கும் மனிதர் கண்டு பூவாய் மலர்ந்தேன்
முதுகுக்குப் பின் செய்யும் துரோகம் கண்டு
உடைந்து நிற்கின்றேன்.
எஸ். ஜனனி அந்தோணிராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009