‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.
எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097