மாறும் வர்ணமாய் மாறும்
நம் வாழ்வு,,,,
அன்னை தெரசாவின் அகம் தொட்ட வெண்மை
தாய்மையாய் மனதில் ஏறி ஊறி
அன்பு மயத்தில் ஒழிந்து போனது
பல நோயோடு தொழுநோய்...
காவி நிறம் எடுத்து விவேகானந்தமாய்
கடும் சொல் தவிர்த்து
சமுதாயம் வாழ... மீள
வழி பல உரைப்பார் பல தவத்திருக்கள்...
வானம் பொழிய வழிந்த நீரில்
வர்ணம் ஏற்றிய விவசாயி பசுமையாக்கினான்
கொடும்பசியாறியது உலகம்...
ஜார் கொடுமையில் வழிந்த
இரத்த நிறம் தொட்டான் ஒருவன்
செவ்வண்ணம் ஏறி
விடுதலை விடுதலையென
கூவிக் களித்தன பல புரட்சிப்பூக்கள்....
இன்றும் பல வர்ணங்கள் பல விதமாய்
தன்நிறம் தொட்டவர் நிறம் மாற்றி
மகிழ்வாய் அழகாய் இருக்க...
ஏனோ?
வர்ணஜாலம் காட்டி
தொட்ட வர்ணமெல்லாம் ஏற்று
சுயநலமாய் வாழக் கற்றுக்கொண்டது
பச்சோந்தி.
-யுவபாரதி, கந்தகப்பூக்கள்,
சிவகாசி.
Subscribe to:
Posts (Atom)