அவனின் மெளனங்கள்......
மொட்டவிழ்த்த மலர்கள் மீண்டும் கூம்பிக்கொண்டன
கட்டவிழ்த்த மழைத்துளிகள் மீண்டும் கருமுகிலினுள்
ஒளிந்து கொண்டன
அவளின் துயர் கண்டு.......
காற்றிடம் கதை பேசிய காலங்களில்
சேகரித்துக் கொண்டாள்
சிறு காதல் தேனியாக அவன் மெளனங்கள
அமைதியாக உறைந்திருந்த அவன் மெளனங்கள்
மெல்லக் கதை பேசத் தொடங்கின அவளுடன
அம் மெளனங்களின் மொழி புரியாமல் திகைத்தவள்
துடிக்கத் தொடங்கினாள
பதறினாள் கதறினாள்
துடித்தாள் துவண்டாள
களைத்து உட்கார்ந்தாள்
அவன் நினைவுகளின் மடியில
மெதுவாக மிக மெதுவாக
அவள் செவிப்பறையில் சடுதியான ஒரு மோதல
அவள் கண்கள் மலர்ந்தன
கண்ணீர் பூக்கள் உதிர்ந்தன
உதடுகள் மட்டும் இறுகப்பூட்டியிருந்தன
சாவியைத் தொலைத்து விட்ட
ஆமாம்,
அவள் மொழி பெயர்த்துக் கொண்டாள்
அவன் மெளனங்களை தன் மெளனங்களால
அவன் மெளனங்கள் கூட
அவளுக்காக மட்டுமே எழுதப் பட்ட
மொழிகளல்லவா......
"தேவா"