ஹைக்கூ
கோலமிடாமல் சென்றது/
தூறிடும் வானம்..
.
யுவபாரதி, கந்தகப்பூக்கள்
இணையதளத் தமிழ்க் கவிதை இதழ் - Neruppoo Inaiyathala Tamil Kavithai Idhazh ................... tamil - tamil kavithaikal - tamil katturaikal - tamil eelam - tamil poem books - tamil short story - english to tamil - short film - kurum padam - tamil news - photo poem - tamil library - tamil search
by yuvabharathi
by yuvabharathi
by yuvabharathi
Posted in kavithai tamil kavithai, rainy day by யுவபாரதி
Posted in kavithai tamil kavithai, rainy day by யுவபாரதி
Posted in rainy day by யுவபாரதி
Posted in kavithai tamil kavithai rain rainy day by யுவபாரதி
by யுவபாரதி
மொட்டவிழ்த்த மலர்கள் மீண்டும் கூம்பிக்கொண்டன
கட்டவிழ்த்த மழைத்துளிகள் மீண்டும் கருமுகிலினுள்
ஒளிந்து கொண்டன
அவளின் துயர் கண்டு.......
காற்றிடம் கதை பேசிய காலங்களில்
சேகரித்துக் கொண்டாள்
சிறு காதல் தேனியாக அவன் மெளனங்கள
அமைதியாக உறைந்திருந்த அவன் மெளனங்கள்
மெல்லக் கதை பேசத் தொடங்கின அவளுடன
அம் மெளனங்களின் மொழி புரியாமல் திகைத்தவள்
துடிக்கத் தொடங்கினாள
பதறினாள் கதறினாள்
துடித்தாள் துவண்டாள
களைத்து உட்கார்ந்தாள்
அவன் நினைவுகளின் மடியில
மெதுவாக மிக மெதுவாக
அவள் செவிப்பறையில் சடுதியான ஒரு மோதல
அவள் கண்கள் மலர்ந்தன
கண்ணீர் பூக்கள் உதிர்ந்தன
உதடுகள் மட்டும் இறுகப்பூட்டியிருந்தன
சாவியைத் தொலைத்து விட்ட
ஆமாம்,
அவள் மொழி பெயர்த்துக் கொண்டாள்
அவன் மெளனங்களை தன் மெளனங்களால
அவன் மெளனங்கள் கூட
அவளுக்காக மட்டுமே எழுதப் பட்ட
மொழிகளல்லவா......
"தேவா"
by யுவபாரதி
by யுவபாரதி

by யுவபாரதி
கண்ணீர்க் கோடுகளுடன்
பாரம் சுமந்தபடி
கடந்து போனது
நத்தை...
"சக மனிதனைப் போல"
கந்தகப்பூக்கள் யுவபாரதி
சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா.
by யுவபாரதி
Posted in begger begger child indian begger kavithai tamil kavithai by யுவபாரதி
ஒரு
மழையைப் போல்
சட்டெனக்
கரைத்து விட்டாய்!
தேடிக் கொண்டே
இருக்கின்றேன்
என்னை!
ஸ்ரீமதி,
குறிஞ்சிப்பாடி,
கொலுசு S.M.S. இதழ்
Posted in kadhal kavithai, kavithai, tamil ilakkiyam, tamil kavithai by யுவபாரதி
கோடையின் வெம்மையில்
தார்ச்சாலையில் அமர்ந்து
ஒரு செங்கல்லை இருக்கையாக்கிக்கொண்டு
முழு நீளக் கம்பியினை
ஒரே அளவினாலான
சிறு சிறு துண்டுகளாக
அறுத்துக்கொண்டிருக்கிறார்
காலங்காலமா
பற்கள் தேய்ந்துபோன
ஒரு நாளில்
அவ் அரத்தை
தூக்கியெறிந்துவிடுகிறார்
அரத்தின் முதலாளி
Posted in kadhal kavithai, kavithai, tamil ilakkiyam, tamil kavithai by யுவபாரதி
கேள்விக்குறியாய்...
சூழும் துன்பங்களே
சூறாவளியாய்...
.
ஆறாத கடுந்துயரத்தில்
சுழன்று ஆர்ப்பரிக்கும்
கவலைக் கடலலையில்
உடல் நோக
தடம் புரணடு இடந்தெரியாமல்
இன்னலுரும் இழி நிலை
ஈழத்தமிழர் வாழ்வின்
இழிநிலை இன்னமும்...
.
சின்னப்புத்தி சிங்களச் சிப்பாய்களின்
கடுந் தோட்டாக்களுக்கு
சின்னாபின்னமானது
புனிதமான புத்த விகாரமும் தான்..
.
நிராதரவாக ஆதரவி தேடி
ஈழத்து வீதிகளில்
புத்தரே பழுத்த துனபத்துடன்
அலையும் அவல நிலை...
.
ஈழத்து பழச்சந்தையில்
பழக்குவியலுக்குப் பதிலாக
ஈழத்தமிழரின் பிணக்குவியல்கள்...
.
இறந்த ஈழப்பிஞ்சுகளின்
வதைபட்ட பூவுடலைப்
புதைத்திட ஆழ்மயாணத்தில்
சிறிதும் இடமில்லை...
.
ஈழத்துக் குழாய்களில்
குடிநீருக்குப் பதிலாகக்
குமுறும் ஈழத்தமிழரின்
இரத்தப் பிரவாகம்....
.
பிறந்த குழந்தை வாயில்
பாலுக்குப் பதில்
கொல்லப்பட்ட தாயின் இரத்தம்...
.
இருமடங்காய் ஒலிக்கும்
கொதிக்கும் என் இரத்தத்தின் வலி...
என்று மாறும் எம்மக்கள் இழிநிலை...
எழுந்திடு தமிழே... தமிழினமே....
.
கலைத்தாமரை,
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
by யுவபாரதி
சமீபத்திய பதிவுகள்
குறுங்கவிதை
அவனின் மெளனங்கள்......
*குறுங்கவிதை
*நேர்த்திக்கடன்?
*காதல்மழை
*ஆட்டோகிராப்
*அரம் போலும் வாழ்வு
*எங்கே நிம்மதி
*சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட்2009
*மௌனம் பேசும் வார்த்தை
*வாழ்க்கை
*அன்புத் தோழியே
*முரண்
*பயணம் மாத இதழ் (ஜூன்2009)
*விவசாயியின் வி(உ)ளைச்சல்
* துளிப்பா
* போர்க்குண விதைகள்
* நல்ல மனிதன்
*மழை
*சிகரம் சிற்றிதழ் கவிதைகள் (மே-ஜூன்2009)*நீலநிலா சிற்றிதழ்கவிதைகள் (ஜூலை 09)